ம்...
என்ன ஒரு மாதிரி இருக்கே?
ஏய் உனக்கும் கிண்டலா?
கோவிச்சுகாதம்மா, சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்...
சொல்லு கண்ணு, என்னா சோகமா இருக்கே?
ம்.... வீட்லேருந்து போன் வந்தது, பாட்டிக்கு பைத்தியம் பிடிச்சிருச்சாம்...
எந்த பாட்டி, எப்பப்பாத்தாலும் மரத்தில ஏறி கூச்சல் போடுமே அதா? நான் அப்பவே சொன்னேன் பைத்தியக்கார டாக்டர்கிட்டே கொண்டுபோன்னு, கேட்டாதானெ, எதோ எனக்குத்தான் பைத்தியம் பிடிச்ச மாதிரி பேசினியே....
ஏய், அந்த பாட்டி இல்லடி, அதை எப்பவோ ஆஸ்பிட்டல்ல சேத்துட்டோம்... இது ஒன்னு விட்ட பாட்டி....
அப்படியா...கேக்கவே கஷ்டமா இருக்கிடி...
ம்....
கேட்க மறந்துட்டேன், உன் அண்ணா எப்படி இருக்கார்....
ம்... என்ன கேட்கலியேன்னு நினைச்சேன், நல்லா இருக்கார்டி... இப்போ கொஞ்சம் தேவலையாம்... ரோட்டுல போறவங்கல கல்லால அடிக்கிறத நிருத்திட்டாராம்...
ஏய்... நான் அப்பவே சொல்லல அந்த டாக்டர் எல்லா பைத்தியத்தையும் குணப்படித்திடுவாருன்னு.... எனக்கென்னவோ உன் அண்ண ஒரு நாள் முழுசா குணமாயிடுவாருடி... ரொம்ம கவலைப்படாதெடி....
ம்...
என்னடி இது சாருநிவேதிதா கதையில வர்ர கேரக்டர் போல, ஒரே பைத்தியமா இருக்கு....
ஹேய்... நானும் அதைத்தான் நினைச்சேன்...
என்ன ஒற்றுமை நம்ம ரெண்டுபேருக்கும்...
என்னடி ஒன்னுமே பேசாம இருக்க...
ம்... நம்ம வாழ்க்கைய நினைச்சா, நமக்கே பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு.... சட்டைய கிழிச்சுகிட்டு ஓடனும்போல இருக்குடி
குட்... நல்ல ஐடியா...
ஏக்... தோ... தீன்.. ச்செலோ.....
(தானே மென்டல் ஹாஸ்பிட்டலில் இருந்து ராஜகுமாரன்)
Thursday, October 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment