முள்ளு முனையிலே
மூனு குளம் வெட்டிவெச்சோம்
ஒன்னு பாழு
ரெண்டுல தண்ணியே இல்ல....
அமைச்சர் ஐயாவுக்கு பத்து பர்சன்ட்
எம் எல் ஏ ஐயாவுக்கு ஏழு பர்சன்ட்
சத்தமா பேசுற ஐயாவுக்கு மூனு பர்சன்ட்
கொட்டி....
முள்ளு முனையிலே
மூனு குளம் வெட்டிவெச்சோம்
ஒன்னு பாழு
ரெண்டுல தண்ணியே இல்ல....
--ராஜகுமாரன்
Saturday, March 21, 2009
Sunday, March 15, 2009
இணையக் குறள் (iKural) - யுனிகோட் தமிழ் சொற்செயலி
அன்பர்களே, இன்று குறள்சாஃப்ட் நிறுவனத்திலிருந்து ஓர் அறிப்பு மின்னஞ்சல். அவர்களின் புதிய பதிப்பான இணையக் குறள் என்ற யுனிகோட் தமிழ் சொற்செயலி பற்றிய அறிவிப்பு.
நான் வெகுகாலமாக அவர்களின் தயாரிப்பான "குறள் தமிழ்ச் செயலியை" உபயோகிக்கின்றேன். மிக அழகான உயரிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டது. எனவே அவர்களின் புதிய முயற்சியை சோதனை செய்தேன். அதுவும் மிக அற்புதமாக வேலை செய்கின்றது. எனவே அனைவரும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன்.
இதோ அந்த அறிவிப்பின் தமிழாக்கமும் சாரமும்:
இணையக் குறள் (iKural) என்றால் என்ன?
இணையக் குறள் என்பது இணையம் சார்ந்த் ஒர் இந்தியச் சொற்செயலி, தற்சமயம் தமிழ் மொழி மட்டுமே உபயோகிக்கலாம்.
அதன் சிறப்பம்சங்கள்:
- உயரிய தொழில் நுட்பத்துடன் வடிவமக்கப்பட்டி இணையம் சார்ந்த இந்திய சொற்செயலி.
- ஒலியயல் (Phonetic), தமிழ்99, புதிய மற்றும் பழைய தட்டச்சு சார்ந்த விசைபலகை அமைப்பு.
- HTML அலலது TEXT வகையான கோப்புகளை உருவாக்களாம்.
- கோப்புகளை சேமிக்கவும், திறந்து மறுபதிப்பு செயயவும் முடியும்.
- கோப்புகளை அச்சு (Print) எடுக்கவும் முடியும்.
- Draft Mode-ல் வேகமாக உள்ளீடு செய்து, பின்பு Edit Mode-ல் அழகுபடுத்தலாம்.
- புதியவர்களுக்காக திரைவிசைப்பலகை.
- Internet Explorer, FireFox, Safari and Google Chrome போன்ற இணைய உலவிகளை உபயோகிக்கலாம்.
- அத்துடன் இது முற்றிலும் இலவசம்!
இணையக் குறளை உபயோகிக்க கீழ் காணும் இணைய தளம் சென்று, தமிழில் உள்ளீடு செய்யத் தொடங்கவும், அவ்வளவு சுலபமாக வேலைசெய்கின்றது.
http://www.kuralsoft.com/
முயற்சி செய்யுங்களேன்....
அத்துடன் இது Yahoo! Gallery -ல் காட்சிக்காகவும் வைக்கப்பட்டுள்ளது. அதை இங்கே காணலாம்:
http://gallery.yahoo.com/apps/
பிரியங்களுடன்...
ராஜகுமாரன்
Tuesday, October 21, 2008
ஸ்டாக் மார்கெட்டும் குரங்கு வியபாரியும்.
அன்று:
மச்சி நூறு ரூபாய்க்கு வாங்கின ஸ்டாக்கின் இப்போதைய மதிப்பு தெரியுமா?
ஙே...
ஒன்று ஆயிரம் ரூபாய்...
வாவ்... எப்படிடா உட்கார்ந்த இடத்தில் இருந்தே இப்படி சம்பாதித்தே?
இன்று:
மச்சி என்ன சோகமா இருக்கெ?
ம்... ஆயிரம் ரூபாய்க்கு வாங்கின ஸ்டாகின் விலை இப்போ என்ன தெறியுமா?
என்னடா....
வெறும் ஒரு ரூபாய்! எல்லாம் இந்த "லீமென் பிரதர்ஸ்" உடைந்ததால் வந்த வினை.
ஙே...
ஓக்கே, எப்படி நூறு ரூபாய்க்கு வாங்கின ஸ்டாக் ஆயிரம் ரூபாவாகி, ஒரே இரவில் ஒரு ரூபாய்க்கு வந்தது? யார் அவ்வளவு கோடான கோடி ரூபாய்களால் லாபம் அடைந்தது? உங்களுக்கும் இதுபோன்ற கேள்விகள் எழுந்திருந்தால், தெளிவுபெற இந்த "குரங்கு வியபாரி" கதையைப் படிக்கவும்.
* * *
ஒரு ஊரில் ஒரு குரங்கு வியபாரியாம், அவன் ஒரு நாள் ஒரு குரங்குக்கு 10 ருபாய் தருவதாக அறிவித்தான். அக் கிராம மக்களோ சும்மா தொல்லை தருகின்ற குரங்குதானே என்று அதை பிடித்து அந்த வியபாரியிடம் விற்றார்களாம். ஒரு மாதத்திற்கு பிறகு அந்த வியபாரி ஒரு குரங்குக்கு 500 ரூபாய் என அறிவிக்க, கிராமமக்களோ செய்யும் வேலையும் விட்டு விட்டு முழு நேர குரங்கு பிடிக்கும் தொழில் இறங்க, அக்காட்டில் குரங்கு கிடைப்பதே அபூர்வமானதாம்.
இப்படியே ஒரு நாள் அந்த வியபாரி, ஒரு குரங்குக்கு 1000 ரூபாய் தருவதாக அறிவிக்க, மொத்த கிராமமே குரங்கு பிடிக்க அலையாய் அலைந்தும், ஒரு குரங்கைக் கூட பார்க்க முடிய வில்லையாம்.
அந்த நேரம் பார்த்து அந்த வியபாரி மொத்த குரங்கு கொள்முதலையும் தன் உதவியாளனிடம் விட்டுவிட்டு வெளியூர் சென்றானாம்.
குரங்கு கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்க, அந்த உதவியாளன் ஒரு உபாயம் செய்தானாம். அவன் தன் முதலாளிக்குத் தெறியாமல் மக்களிடம் ஒரு குரங்கு 800 ரூபாய்க்கு விற்க தாயார் என்று அறிவிக்க, ஊரே அல்லோகலப்பட்டது. தன் ஆடு, மாடு, வீடு, தோடு என்று எலாவற்றையும் விற்று, குரங்கு வாங்கி, அந்த குரங்கு வியபாரி வந்ததும் அவனிடம் விற்று பெரிய இலாபம் சம்பாதிக்கும் கனவில் இருக்க. நடந்ததெ வேறு.
அந்த குரங்கு வியபாரியும் அவன் உதவியாளனும் அந்த ஊர் பக்கமே திரும்பவில்லையாம். மக்கள் விலைமதிப்பில்லா குரங்குகளோடு மல்லுக்கட்டுவதாக செய்தி!
மாரல் ஆஃப் த ஸ்டோரி:
ஸ்டாக் மார்க்கெட் பற்றி முழுமையாகத் தெறியாமல் அதில் முதலீடு செய்யக் கூடாது. வாங்கி விற்பது சுலபம், ஆனால் சரியான நேரத்தில் வாங்கி, சரியான நேரத்தில் விற்பது கடினம், மிக மிக கடினம்.
மூலம்: எங்கேயோ படித்தது!
மூலம்: எங்கேயோ படித்தது!
Thursday, October 9, 2008
ம்... - ( ராஜகுமாரன்)
ம்...
என்ன ஒரு மாதிரி இருக்கே?
ஏய் உனக்கும் கிண்டலா?
கோவிச்சுகாதம்மா, சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்...
சொல்லு கண்ணு, என்னா சோகமா இருக்கே?
ம்.... வீட்லேருந்து போன் வந்தது, பாட்டிக்கு பைத்தியம் பிடிச்சிருச்சாம்...
எந்த பாட்டி, எப்பப்பாத்தாலும் மரத்தில ஏறி கூச்சல் போடுமே அதா? நான் அப்பவே சொன்னேன் பைத்தியக்கார டாக்டர்கிட்டே கொண்டுபோன்னு, கேட்டாதானெ, எதோ எனக்குத்தான் பைத்தியம் பிடிச்ச மாதிரி பேசினியே....
ஏய், அந்த பாட்டி இல்லடி, அதை எப்பவோ ஆஸ்பிட்டல்ல சேத்துட்டோம்... இது ஒன்னு விட்ட பாட்டி....
அப்படியா...கேக்கவே கஷ்டமா இருக்கிடி...
ம்....
கேட்க மறந்துட்டேன், உன் அண்ணா எப்படி இருக்கார்....
ம்... என்ன கேட்கலியேன்னு நினைச்சேன், நல்லா இருக்கார்டி... இப்போ கொஞ்சம் தேவலையாம்... ரோட்டுல போறவங்கல கல்லால அடிக்கிறத நிருத்திட்டாராம்...
ஏய்... நான் அப்பவே சொல்லல அந்த டாக்டர் எல்லா பைத்தியத்தையும் குணப்படித்திடுவாருன்னு.... எனக்கென்னவோ உன் அண்ண ஒரு நாள் முழுசா குணமாயிடுவாருடி... ரொம்ம கவலைப்படாதெடி....
ம்...
என்னடி இது சாருநிவேதிதா கதையில வர்ர கேரக்டர் போல, ஒரே பைத்தியமா இருக்கு....
ஹேய்... நானும் அதைத்தான் நினைச்சேன்...
என்ன ஒற்றுமை நம்ம ரெண்டுபேருக்கும்...
என்னடி ஒன்னுமே பேசாம இருக்க...
ம்... நம்ம வாழ்க்கைய நினைச்சா, நமக்கே பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு.... சட்டைய கிழிச்சுகிட்டு ஓடனும்போல இருக்குடி
குட்... நல்ல ஐடியா...
ஏக்... தோ... தீன்.. ச்செலோ.....
(தானே மென்டல் ஹாஸ்பிட்டலில் இருந்து ராஜகுமாரன்)

Wednesday, April 9, 2008
ராஜகுமாரனின் இடக்கை குறிப்புகள்.
அன்பர்களே...
இங்கு எனது இடக்கை குறிப்புகளைக் காணலாம். கதை மற்றும் அறிவியல் சார்ந்த செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆவலுடன்...
க. ராஜகுமாரன்
அமெரிக்கா.
இங்கு எனது இடக்கை குறிப்புகளைக் காணலாம். கதை மற்றும் அறிவியல் சார்ந்த செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆவலுடன்...
க. ராஜகுமாரன்
அமெரிக்கா.
Subscribe to:
Posts (Atom)